சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைக்கு சீல். 10 கிலோ வெடிமருந்து பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள சித்துராஜ புரத்தைச் சேர்ந்தவர் ஜெயாவிக்னேஷ் இவர் கொங்கலாபுரத்தில் குழாய் கம்பெனி நடத்துவதற்காக குடோனை வாடகைக்கு எடுத்து அதில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் அப்போது அங்கு பணியில் இருந்தவர்கள் அதிகாரிகள் வருவதை கண்டு தப்பி ஓடியுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்யப்பட்டதில் 10 கிலோ வெடிமருந்து மற்றும் முழுமையாக தயார் செய்யப்படாத பேன்சி ரக பட்டாசுகள் கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயவிக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.