சிவகாசி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகிளா நீதிமன்றம். விருதுநகர் மாவட்டம்,
விருதுநகரை அடுத்த ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 41, இவரது மனைவி சீதாலட்சுமி இவர் கடந்த 25. 6. 2014 அன்று வீட்டில் தூக்கில் தொங்கினார் இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் செல்வகுமார் மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், செல்வகுமார் மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி இருவரும் குற்றவாளி என அறிவித்து இருவரும் தலா பத்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் ரூபாய் 3000 அபதாரம் விதித்தும் தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.