சிவகாசி, வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் மஹாகும்பாபிஷேகம் விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக மஹா கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து, பிரசித்தி பெற்ற ஸதலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் எடுத்து வரப்பட்டது. கோவில் கருவறை விமானம், சன்னதி கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகம் விழா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என உற்சாகமாக கோஷமிட்டனர். இதனையடுத்து ஸ்ரீவெங்கடாசலபதி - ஸ்ரீதேவி - ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.