சிவகாசி: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்.

53பார்த்தது
சிவகாசியில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், வெள்ள நிவாரண நிதி வழங்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே, விசிக நகர செயலாளர் மனிதநேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கடந்த மாதம் தென்மாவட்ட மான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான துயரத்தில் உள்ளனர். இதனை தீவிர பேரிடராக அறிவித்து, தமிழக அரசிற்கு 21 ஆயிரம் கோடி ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக ஒன்றிய பாஜக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் வர இருக்கின்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் முன்பு நடைமுறையில் இருந்ததைப் போல வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேசினர். பின்னர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி