Zomato-வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், பங்குதாரர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதில், BlinkIt-டை கையகப்படுத்திய பிறகு, உணவு விநியோக பயன்பாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, Zomato-விற்குப் பதிலாக "Eternal" என்ற பிராண்ட் பெயரை உள்நாட்டில் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், “எங்கள் நிறுவன வலைத்தளம் zomato.com இலிருந்து eternal.comக்கு மாறும். எங்கள் ஸ்டாக் டிக்கரையும் Zomato இலிருந்து Eternal ஆக மாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.