கடலூர் மாவட்டம் வடலூரில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழந்தது. வீட்டில் வைத்திருந்த டீசலை தெரியாமல் குழந்தை குடித்துள்ளது. இதனை கவனித்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து, தகவலறிந்த போலீசார், குழந்தை இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.