நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீலாயதாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருமருகல் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு அரசு செயல் முறை தேர்வு வழக்கம்போல் நடக்கும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.