இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கில் (87), ஸ்ரேயாஸ் (59), அக்ஷர் படேல் (52) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதன் மூலம் இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.