ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக காதலர் தினங்களுக்கு ரோஜா மலர்களுக்கு தான் அதிகம் கிராக்கி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நீலகிரியில் விளையும் கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் வளரும் கொய் மலர்களான லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா போன்றவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூரில் இந்த மலர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.