அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை இன்று முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, காணொலி காட்சி மூலம் நாளை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓரிரு தினங்களில் ஞானசேகரனிடம் ரத்தப் பரிசோதனை நடத்தி, அதன் அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.