ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் பல்வேறு தகவல்களை மறைத்ததாக கூறி சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தேர்தல் முடிந்துவிட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.