மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நோய் தீர மண்ணெண்ணெய் குடித்த தாய் உயிரிழக்க காரணமான மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உமேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 48 வயதான பெண் ஒருவர் பக்கவாத நோய் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மண்ணெண்ணெய் கொடுத்தால் பக்கவாத நோய் தீரும் என யாரோ கூறியதை கேட்ட அவரது மகன் உமேஷ், தனது தாயிற்கு மண்ணெண்ணெய்யை குடிக்க கொடுத்ததாக தெரிகிறது. இதனால், தாய் உயிரிழந்த நிலையில் உமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.