சிவகாசி: அக்கா கணவரை கொலை செய்த மைத்துனர் கைது

7158பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வீரமணி (36). இவர் லோடுமேன் வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் மகளான தனலட்சுமிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2 வருடத்தில் பிரிந்து விட்டனர். பின்னர் வீரமணி, நாகஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீரமணி, நகாஜோதியை திருமணம் செய்து கொண்டது, தனலட்சுமியின் தம்பி மருதுபாண்டிக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் இரவு வழக்கம் போல் வீரமணி தனது மனைவி நாகஜோதி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் போது மருதுபாண்டி, வீரமணி மற்றும் மனைவி நாகஜோதியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் வீரமணிக்கும், நாகஜோதிக்கும் தலை, கைகளில் பலத்த வெட்டுகாயம் விழுந்தது.

படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி வீரமணி உயிர் இழந்தார்.

இது குறித்து எம். புதுப்பட்டி போலீசார் மருதுபாண்டி மீது வழக்குபதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி