விழுப்புரத்தைச் சேர்ந்த சத்யா என்பவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். தொடர்ந்து விழுப்புரத்தில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். வீட்டு வேலை செய்து வந்த சத்யாவுக்கு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்வருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனிடையே சத்யாவுக்கு வேறு ஒரு நபருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை முருகன் கண்டித்துள்ளார். இதனால் நேற்று சத்யாவை வீடு புகுந்து முருகன் குத்திக் கொன்றார்.