நகை கடனுக்காக சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்த வங்கி மேலாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்.
நீதி மன்றம் தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த காளிதாஸ், இவரது மனைவி அமுர்தசெல்வி அங்குள்ள யூனியன் பாங்க் ஆப்
இந்தியா கிளையில் கணக்கு வைத்து உள்ளார். இருவரும் தங்களது குடும்ப தேவைக்காக ஆக. 2021ல் வங்கியில் நகைகளை ஈடாக வைத்து தலா 1. 10 லட்சம் கடன் பெற்றனர். 2022 செப்டம்பர் மாதம் நகை கடன் தவணைக் காலம் முடிந்தது.
மேலும் அவரது சேமிப்பு கணக்கிலிருந்த 26 ஆயிரத்தையும், இவரது மனைவி அமிர்தசெல்வி கணக்கிலிருந்த 2,496 ரூபாயையும் வங்கி நிர்வாகம் எடுத்து நகை கடனுக்கு வரவு வைத்தது. வங்கி நிர்வாகம் தகவல் இல்லாமல் சேமிப்பு கணக்கிலிருந்த பணத்தை நகை கடனுக்கு வரவு வைத்ததை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இருவரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
இருவரது வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், அதில் வாடிக்கையாளர்களின் முன் அனுமதி மற்றும் தகவல் இல்லாமல் சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்தது வங்கி நிர்வாகத்தின் சேவை குறைபாடாகும். எனவே பண இழப்பு, மன உளைச்சல் காரணங்களுக்காக பேங்க் கிளைமேலாளர், வங்கி நிர்வாகம் தலா 15, 000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், அத்துடன் சேமிப்பு கணக்கிலிருந்து நகை கடனுக்கு மாற்றப்பட்ட தொகையை மீண்டும் அவர்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.