தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது. இமது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.