மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 5ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (டிச., 12) மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை காலையில் தேரோட்டம், மாலையில் திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.