மாணவர்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனுடைய நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மற்றும் சிறப்பாக செயல்படவும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.