இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. RBI ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸ் ஓய்வுபெற்றதையடுத்து புதிய ஆளுநராக சஞ்சய் பொறுப்பேற்றிருந்த நிலையில் அவர் கையொப்பத்துடன் முதன்முறையாக ரூபாய் நோட்டுகள் வெளியாகிறது. அதே நேரம், ஏற்கனவே உள்ள 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் தொடரும் என கூறப்பட்டுள்ளது.