பிரான்ஸ் நாட்டில் உள்ள நான்டெஸ் ரயில் நிலையத்தில், டேவின் என்பவர் தனது சகோதரியுடன் போனில் பேசியுள்ளார். சத்தம் அதிகமாக இருந்ததால் அவர் லவுட் ஸ்பீக்கரில் பேசியுள்ளார். இதனைப் பார்த்த ரயில்வே அதிகாரி ஒருவர் கண்டித்துள்ளார். ஆனால், விளையாட்டாக அதிகாரி பேசுவதாக டேவிட் நினைத்து, தொடர்ந்து லவுட் ஸ்பீக்கரில் பேசினார். இதனால், டேவிட்டுக்கு $200 (ரூ.17,375) அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.