சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜராகியுள்ளார். தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கின் விசாரணைக்காக எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா இன்று (பிப்., 13) நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் முன்வைத்தார். இளையராஜா இசையமைத்த பல படங்களில் பாடல்கள் அனுமதியின்றி யூடியூப், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.