சிவகாசி அருகே
108 ஆம்புலன்ஸ் டிரைவர்
தூக்குலிட்டு தற்கொலை. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் ராஜாகனி என்பவரின் மகன் வீரபத்திரன், இவர் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்னர் வீரபத்திரன் புதியதாக வீடு கட்டினார். இதற்காக அவர் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் வீரபத்திரன் மனைவி சித்ராதேவி வழக்கம் போல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த வீரபத்திரன் தூக்குலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து மனைவி சித்ராதேவி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கமலபட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.