சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன். இவர் கடந்த 21ஆம் தேதி சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பொழுது அங்கு இருந்த ராஜேஸ்வரன், செந்தாமரைப்பாண்டி, பரமேஸ்வரன், முத்து, மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் விவரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி லோகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி