கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டிலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.