விருதுநகர்: முத்திரைத் தீர்வையை செலுத்தி ஆவணத்தை விடுவித்துக கொள்ளலாம்

61பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி பதிவுத்துறைத் தலைவர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண். 51762/எல்3/2024, நாள் 18.12.2024-ன்படி, இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B(4), 47A(1) மற்றும் 47A(3)-ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B(4), 47A(1) மற்றும் 47A(3)-ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குரிய குறைவு முத்திரைத் தீர்வையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரண்டாம் தளத்தில் அறை எண். 216-ல் இயங்கி வரும் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி