விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இனாம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குருநாதன் (57), இவர் மகள் பாலகுரு (35), கணவரிடம் பிரிந்து மகள் அர்ச்சனா(16), உடன் இனாம் மீனாட்சி புரத்தில் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் சம்பவதினத்தன்று இரவு வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். மாயமாகிய மகள் பாலகுரு, பேத்தி அர்ச்சனாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாயமாகியுள்ள இருவரையும் கண்டுபிடித்து கொடுக்க வேண்டி வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் குருநாதன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.