புதுச்சேரியில் பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 டெபாசிட் செய்த திட்டத்திற்கான அரசாணை கடந்த 2023 ஜூலை வெளியிடப்பட்டது. முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் அரவணைப்பு திட்டம் அறிமுகமானது. முதல்வரின் அரவணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 3423 பெண் குழந்தைகளின் பெயரில் 50,000 ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1188 பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.