ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கன்னு கலைஞரிடம் நான் தான் சொன்னேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "ஏன் இவ்ளோ பாரம் வைத்திருக்கிறீர்கள், துணை முதல்வர் பதவியை தம்பி ஸ்டாலினுக்கு கொடுங்கள் என்று கலைஞரிடம் நான்தான் சொன்னேன். பலமுறை ஸ்டாலினிடமும் சொல்லி இருக்கிறேன். நான்தான் அப்பாவிடம் பதவி வழங்க கூறினேன் என்று. அதற்கு ஸ்டாலின், "ஆமாம் ஐயா நீங்கள் தான் சொன்னீர்கள்" என்று கூறுவார்" என பேட்டியளித்துள்ளார்.