விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் இன்று (24.02.2024) நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த அஜீத் குமார் என்பவர் உடல் கருகி பலியானார். அவரின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்வதில் உறவினர்கள் இடையை மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.