விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம் மேலாண்மறைநாடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்பாண்டியன். இவர் ராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பொன்பாண்டியன் தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியின்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவரது உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், இன்று (செப்.,6) நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் இறந்த ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.