சாத்துார் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. 70 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துாரிலுள்ள தனியார் பள்ளி அருகே பேருந்து நிறுத்தம் முன்பாக ர கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சாத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சாத்துாரை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் 23 வயதுடைய இளைஞர் கருப்பசாமி என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.