வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோ.. உதவிய அரசுப் பேருந்து

53பார்த்தது
சென்னையில் தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் நீடிக்கும் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரில் ஆட்டோ ஒன்று சிக்கிக்கொண்டது. இதனை கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், அந்த ஆட்டோவை பேருந்து மூலம் சுமார் 500 மீட்டர் வரை தள்ளிச் சென்று மேடான பகுதியில் விட்டுச் சென்றார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி