சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் இன்றிரவு முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம். நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன” என்றார்.