சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார். அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் புத்தகத்தை பெற்றுக் கொள்கின்றார். வாய்ஸ் ஆப் காமென்ஸ் நிறுவனரும், விசிக துணைப் பொதுச் செயலருமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் இவ்விழாவில் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென முடிவை மாற்றினார்.