விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வாகைக்குளம் பட்டியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் மாநில தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு விருதுநகரில் அரசு சார்பில் வெண்கல சிலை அமைக்க வேண்டும், 42 உட்பிரிவுகளில் உள்ள வேளாளர் சமுதாயத்தை வெள்ளாளர் என குறிப்பிட்டு அரசாணை வெளியிட வேண்டும், இதற்கு முன் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெள்ளாளர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ரூபாய் நோட்டுகளில் வ. உ. சிதம்பரம் பிள்ளை புகைப்படம் இடம் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் சரவணன் பேசும் போது, ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் விரைவில் தென்காசி மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் சுகாதார சீர்கேடு அதிகமாக உள்ளதால் அதை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.