இராஜபாளையம் அருகே பஞ்சாயத் அலுவலகம் முன்பாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள அய்யன்கொல்லங்கொண்டான் பஞ்சாயத் அலுவலகம் முன்பாக லாட்டரி விற்பனை செய்வதாக சேத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவல் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் முருகராஜ் தலைமையில் சம்ப இடத்திற்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். சோதனையில் சேத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முகேஷ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.