இராஜபாளையம் அருகே தகர செட்டில் சரவெடி பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே தெற்கு மலையடிப்பட்டியில் உள்ள விநாயகர் கோவில் அருகே வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சரவெடிகள் மற்றும் பலதரப்பட்ட பட்டாசுகள் பதுக்கி இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் அஜீத்குமார் தலைமையில் போலீஸார் நேரில் சோதனை நடத்தினர். மேலும் சோதனையில் சரவெடிகள் மற்றும் பலதரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய பெட்டிகள் இருப்பு இருந்ததை போலீஸார் பறிமுதல் செய்து வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.