அதிமுகபொதுச்செயலாளருக்கு முன்னாள்அமைச்சர் தலைமையில் வரவேற்பு

56பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு வருகை புரிந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.


விருதுநகர் மாவட்டம் அருபபுக்கோட்டை அதிமுக ஒன்றிய கழக செயலாளர் யோகா வாசு தேவன் இல்ல விழாவில் அருப்புக்கோட்டை அத்திப்பட்டி அருகே நடைபெறுகிறது.

இந்நிலையில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் இல்ல விழாவிற்கு வருகை புரிந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ராமசாமிபுரம் விலக்கு அருகே முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தலைமையிலான அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் வழி நெடுக அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து பதாகைகள் ஏந்தியவாறு மலர் தூவி கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் கடம்பூர் ராஜு நத்தம் விஸ்வநாதன் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி