விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் அருப்புக்கோட்டை இணைந்து நடத்தும், பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் 04.01.2025 மற்றும் 05.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவினை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோர் 04.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் துவக்கி வைக்க உள்ளனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும், மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், வேளாண்மைத் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. எனவே, மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.பி. ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.