'எம்புரான்' 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்

68பார்த்தது
'எம்புரான்' 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்
'எம்புரான்' திரைப்படம் 5 நாட்களில் 200 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' கடந்த 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், 'எம்புரான்' 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அதிவேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி