காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் மரியாதை

79பார்த்தது
தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ‌ இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவுபடி, பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மத்திய மாவட்ட தலைவர் சின்னப்பர் ஆலோசனைப்படி, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாரீஸ்வரன் தலைமையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜர் பிறந்த நாளை கொண்டாடினர். இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌

தொடர்புடைய செய்தி