அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பராபுரம் விலக்கு அருகே சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடத்தில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகள் மேலும் பள்ளமும் ஆக உள்ளதால் கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டும் குழியுமான பகுதிகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.