அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் ஊராட்சியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதற்காக மதுரை சாலையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து காணப்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.