கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்த நகர் மன்ற உறுப்பினர்கள்

74பார்த்தது
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. ‌ இந்த கூட்டத்தில் பேசிய நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி புளியம்பட்டி பகுதியில், கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ‌ இதனால் குப்பைகள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது என பேசினார். அதனை தொடர்ந்து பேசிய நகர்மன்ற உறுப்பினர் ஜோதி ராமலிங்கம் நெசவாளர் காலனிகல் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ‌ இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். ‌ மேலும் நகர் மன்ற உறுப்பினர் ஜெய கவிதா பேசுகையில் தெற்கு தெரு விரிவாக்க பகுதியில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது. ‌
அப்பகுதியில் தேவையான மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். நகர்மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் பேசுகையில் மாட்டு இறைச்சி கடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ‌ அந்த ஆக்கிரமிப்புகளை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். ‌ நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விநாயகர் மன்ற தலைவர் உறுதி அளித்தார் இவ்வாறு கூட்டம் நடைபெற்றது. ‌

தொடர்புடைய செய்தி