ஓசூர் TO பெங்களூரு மெட்ரோ திட்டம் குறித்து ஆய்வு!

52பார்த்தது
ஓசூர் TO பெங்களூரு மெட்ரோ திட்டம் குறித்து ஆய்வு!
பெங்களூரு - ஓசூர் நகரங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்த ஆலோசனை இன்று (ஆகஸ்ட் 27) ஓசூரில் நடைபெற்றது. கர்நாடகாவின் அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையுடன் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்தி