உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கற்போர் மையங்களில் செப். 1 முதல் 8-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து எழுத்தறிவு மையங்களிலும் செப்., 1 முதல் 8-ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி, உறுதி மொழி ஏற்பு, சிறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். அந்நிகழ்வுகள் சார்ந்த ஆவணத் தொகுப்பை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.