உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயி சிவ்ராஜ் நிஷாத் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வந்தார். மருத்துவ தாவரங்கள் தொடர்பாக அறிந்திருந்த அவர் வீணாகும் பூக்களின் ஆயுளை நீட்டித்து விற்பனை செய்ய திட்டமிட்டார். ஊதா கலர் பட்டாணி பூக்கள் மூலிகை தேநீர் தயாரிக்கப் பயன்படும் என்பதைத் தெரிந்துக் கொண்டு அதன் நிறம், மருத்துவ குணம் மற்றும் வாசனை மாறாமல் உலர வைத்து விற்பனை செய்கிறார். இதில் மாதம் ரூ.4 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.