முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 15, 914 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
15. 10. 2024- மலைப்பட்டி
16. 10. 2024- வதுவார்பட்டி
17. 10. 2024- அம்பலத்தேவநத்தம்
18. 10. 2024- ஆமணக்குநத்தம்
19. 10. 2024- கட்டங்குடி
20. 10. 2024- சின்னவள்ளிகுளம், ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.