விருதுநகர் மாவட்டம், அருப்பக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (அக்.,19) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று, கோட்ட அளவிலான வருவாய்த்துறை கோப்புகள், பணிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து, அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மற்றும் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.