மெதுவாக நைட்ரஜனை வெளியிடும் நானோ உரத்துக்கான காப்புரிமையை, கோவை வேளாண் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. நானோ உர கலவைகளை, இலைவழியே தெளிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இச்சிக்கலுக்கு தீர்வு காண வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் முயன்றனர். இதன் விளைவாக, நேரடியாக மண்ணில் இடுவதற்கு ஏதுவான நானோ யூரியா உரத்தை, வேளாண் பல்கலை உருவாக்கியது. இக்கண்டுப்பிடிப்புக்கு சென்னை காப்புரிமை அலுவலகம், காப்புரிமை வழங்கியுள்ளது.